கவிதைகளில் பன்முகச் சிந்தனைகள்
ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06.11.2023 திங்கட்கிழமையன்று பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் தமிழ்த் துறையில் பாரதியார் “கவிதைகளில் பன்முகச் சிந்தனைகள்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். வீ.சண்முகராஜு அவர்கள் தலைமை ஏற்றுத் துவங்கி வைத்தார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். உமாமகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். வி எல் பி ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சுரேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வி எல் பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சதீஷ்குமார் அவர்கள் கருத்துரை ஆற்றினார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையர் திரு.சங்கர் அவர்கள் பாதுகாப்பான தீபாவளி எனும் தலைப்பில் உரையாற்றினார். பிரெஞ்சு துறை பேராசிரியர் திரு. அரவிந்தன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் பாரதியாரின் பன்முகச் சிந்தனைகள் என்னும் தலைப்பில், மாணவர்கள் வருங்காலத்தில் சமுதாயத்தில் முக்கியப் பங்கு வகிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி உரையாற்றினார்.