Skip links

மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

“ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது”

புதுச்சேரி, மார்ச் : 11,

ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் ஜே சி ஐ பாண்டிச்சேரி zone 16 -யும் இணைந்து

11.03.2024 திங்கட்கிழமையன்று “சர்வதேச மகளிர் தின விழா” கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.உமா மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் த.ஜனார்த்தனன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மக்கள் இசைக் கலைஞர் ஜே சி ஐ திரு.சுந்தர வடிவேலு அவர்கள் இசைக் கச்சேரி நிகழ்த்தினார். மகளிர் தின விழாவில் பெண் பேராசிரியர்கள் அனைவரையும் கௌரவித்தனர். மாணவர்களுக்கு மகளிர் தின விழாவினையொட்டி பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவின் இறுதியாக ஜே சி ஐ திரு.சுந்தரவடிவேல் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Leave a comment