தமிழ்க் காப்பியங்களில் வெளிப்படும் அறச்சிந்தனைகள்


ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் ஆச்சாரியா கல்விக் குழுமத்தின் மேலாண் இயக்குநர் முனைவர் ஜெ.அரவிந்தன் அவர்களின் வழிகாட்டுதலின் படி சிறப்புச் சொற்பொழிவு கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இச்சொற்பொழிவினைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. விமல்ஆனந்த் அவர்கள் தலைமைத் தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு வருகைப் புரிந்த அனைவரையும் வரவேற்று, கல்லூரியின் தமிழ்த் துறையின் தலைவர் முனைவர் மௌ. அஸ்கர் அலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராகக் காஞ்சிமாமுனிவர் அரசுப் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் அவ்வுரையில் தமிழ்க் காப்பியங்களில் வெளிப்படும் அறச்சிந்தனைகள் குறித்துப் பல்வேறு இலக்கியச் சான்றுகள் எடுத்துக்காட்டி மாணவர்களுக்கு விளக்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.இராஜாராமன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியைத் தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர் முனைவர் சு. உமாமகேஸ்வரி அவர்கள் தொகுத்து வழங்கினார். இச்சொற்பொழிவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கா.சிலம்பரசன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.