குடியரசுத் தின விழா

ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76-வது குடியரசுத் தின விழா ஞாயிற்றுக்கிழமை (26.01.2025) அன்று கொண்டாடப்பட்டது.
ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76-வது குடியரசுத் தின விழா, கல்லூரியின் மேலாண் இயக்குநர் முனைவர் ஜெ. அரவிந்தன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. விமல்ஆனந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஞாயிற்றுக்கிழமை (26.01.2025) அன்று குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் த. ஜனார்த்தனன் அவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கொடியேந்தி அணிவகுத்துச்சென்று கல்லூரிக் குடியரசுத் தின விழாவைச் சிறப்பிதனர். பின்னர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். வணிக மேலாண்மை துறைத் தலைவர் திரு. நேத்திர பிரகாஷ் அவர்கள் இவ்விழாவிற்கான நோக்கவுரையாற்றினார். இவ்விழாவில் அனைத்துத்துறை சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இறுதியாக நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் துறை பேராசிரியர் மற்றும் கல்லூரி நாட்டு நல்லப்பணித் திட்ட அலுவலர் முனைவர். கா. சிலம்பரசன், உடற் கல்வித்துறை பேராசிரியர் திருமதி. S. இராஜலட்சுமி மற்றும் நாட்டு நல்லப்பணி திட்ட மாணவர்கள் செய்திருந்தனார்.