ஆச்சார்யா மகா உட்சவ் 2K24


ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆச்சார்யா மகா உட்சவ் 2K24. ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆண்டு விழா ஆச்சாரியா மகா உற்சவம் 2K24 நிகழ்வு 24.05. 2024 வெள்ளியன்று சிறப்பாக நடைபெற்றது. ஆச்சார்யா கல்விக் குழுமத்தின் தாளாளர் முனைவர் ஜெ அரவிந்தன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தலைமை உரையாற்றி விழாவினை தொடங்கி வைத்தார். ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் விமலானந்த் வரவேற்புரை ஆற்றினார். விஜய் டிவியின் கலக்கப்போவது யார் புகழ் கே பி ஒய் பாலா விக்கி சிவா ஆகியோர் உறுப்பினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.கலை விளையாட்டு துறைகளில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரிய பெருமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதக்கங்களையும் பரிசுகளையும் குவித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறியது. ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் டி. ஜனார்த்தனன் அவர்கள் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர் பெருமக்களும் மாணவர்களும் செய்திருந்தனர்.