ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஆச்சாரியா பொறியியல் கல்லூரி இணைந்து 02.08.24 03.08.24
ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஆச்சாரியா பொறியியல் கல்லூரி இணைந்து 02.08.24 (வெள்ளிக் கிழமை) 03.08.24 (சனிக்கிழமை ) ஆகிய இரண்டு நாட்கள் *தேசிய விண்வெளி நாளாக* கொண்டாடப்பட்டது.
3.8.24 ( சனிக்கிழமை ) அன்று இரண்டாம் நாள் நிகழ்வில் ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
துணை முதல்வர் முனைவர். தி.ஜனார்த்தனன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் . விமல் ஆனந்த் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். ஆச்சாரியா பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். குருலிங்கம் அவர்கள் நோக்க உரையாற்றினார். சதிஷ்தவான் விண்வெளி மைய இயக்குநர் திரு. கிரக துரை அவர்கள் கருத்துரை வழங்கினார் . சதிஷ்தவான் விண்வெளிக் கழக அலுவலர் திரு. ராம்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றனார்.
மேலும், முதல் நாள் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டியில் புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, ஆச்சாரியா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் பரிசு பெற்றனர். அமலோற்பவம் பள்ளி, பெட்டி செமினார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் பரிசு பெற்றனர். மேல்நிலைப் பள்ளிகளுக்கான வினாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி, பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, ஏம்பலம் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டாம் பரிசு பெற்றனர். ஏக்லவியா மேல்நிலைப்பள்ளி மூன்றாம் பரிசு பெற்றது. சதீஷ் தவான் விண்வெளி கழகத்தின் இயக்குனர் திரு கிரக துரை அவர்கள் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஆச்சாரியா கல்விக் குழுமத்தின் மேலாண் இயக்குநர் முனைவர் ஜெ.அரவிந்தன் அவர்களின் வழிக்காட்டலின்படி கல்லூரி நிர்வாகம் மற்றும் இரு கல்லூரிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.