Skip links

ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஆச்சாரியா பொறியியல் கல்லூரி இணைந்து 02.08.2403.08.24

ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஆச்சாரியா பொறியியல் கல்லூரி இணைந்து 02.08.24 (வெள்ளிக் கிழமை) 03.08.24 (சனிக்கிழமை ) ஆகிய இரண்டு நாட்கள் தேசிய வி ண்வெளி நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம், அறிவியல் கண்காட்சி, விண்வெளி தொடர்பான தகவல்கள், வினாடி வினா போட்டி எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வினை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். *ராகேஷ் அகர்வால்* மற்றும் சதிஷ்தவான் விண்வெளி மைய இயக்குநர் திரு. *ராஜராஜன்* ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆச்சாரியா கல்விக் குழுமத்தின் மேலாண் இயக்குனர் முனைவர் *ஜெ.அரவிந்தன்* அவர்கள் தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு. *முரளிதரன்* அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சதிஷ்தவான் விண்வெளி மைய இணை இயக்குநர் திரு. *டி.எஸ்.ரகுராம்* அவர்கள் சிறப்புரையாற்றினர். ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் *எஸ். விமல் ஆனந்த்* அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் ஆச்சாரியா பொறியியல் கல்லூரியின் முதல்வர் *முனைவர் எஸ். குருலிங்கம்* அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானி திரு. *ராஜராஜன்,* இந்நிகழ்ச்சியின் மூலம் விண்வெளியால் என்னென்ன நன்மைகளை நாம் அடைகிறோம், நம் வாழ்வில் முன்னேற்றத்திற்கு விண்வெளி எப்படி பயன்படுகிறது, விண்வெளி ஆராய்ச்சி படிப்புகளை எப்படி படிப்பது உள்ளிட்ட தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். வரும் 2047-ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பது இந்தியப் பிரதமர் மட்டுமின்றி நமது அனைவரின் கனவாக இருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும், பயிற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றனஎன்று தெரிவித்தார்.

எழுத்தாளர் திரு. *ஆயிஷா நடராசன்* அவர்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இளம் தலைமுறையினரை எப்படி மாற்றுவது என்பதற்கான நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. உலகிலேயே நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை தரஇறக்கியது நான்கு நாடுகள் தான். அதில் இந்தியாவும் ஒன்று என்றும் அது நமது விஞ்ஞானிகளால் தான் சாத்தியமானது என்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆச்சாரியா கல்விக் குழுமத்தின் மேலாண் இயக்குநர் முனைவர் ஜெ.அரவிந்தன் அவர்களின் வழிக்காட்டலின்படி கல்லூரி நிர்வாகம் மற்றும் இரு கல்லூரிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Leave a comment